இலங்கையை வீழ்த்திய இந்தியா: U-19 மகளிர் T20 World Cup ‘சூப்பர் 6’ சுற்றுக்கு முன்னேற்றம்

நடப்பு ஐசிசி யு19 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்று போட்டியில் இலங்கையை 60 ரன்களில் வீழ்த்தியது இந்தியா. இப்போது அடுத்த சுற்றான ‘சூப்பர் 6’ சுற்றுக்கு இந்தியா முன்னேறியுள்ளது.

Jan 24, 2025 - 12:40
 0  3
இலங்கையை வீழ்த்திய இந்தியா: U-19 மகளிர் T20 World Cup ‘சூப்பர் 6’ சுற்றுக்கு முன்னேற்றம்

சென்னை: நடப்பு ஐசிசி யு19 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்று போட்டியில் இலங்கையை 60 ரன்களில் வீழ்த்தியது இந்தியா. இப்போது அடுத்த சுற்றான ‘சூப்பர் 6’ சுற்றுக்கு இந்தியா முன்னேறியுள்ளது.

19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மலேசிய நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் இந்தியா பங்கேற்றுள்ளது. மொத்தம் 16 அணிகள் இதில் விளையாடுகின்றன. 41 போட்டிகள். 16 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிந்து முதல் சுற்றில் விளையாடுகின்றன. தொடர்ந்து ‘சூப்பர் 6’ சுற்று நடைபெறுகிறது. இதில் குரூப் சுற்றில் முதல் மூன்று இடங்களை பிடிக்கின்ற அணிகள் இரு பிரிவுகளாக பிரிந்து விளையாடும். பின்னர் அரையிறுதி மற்றும் இறுதி போட்டி நடைபெறுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow