இரும்பு மீதான அமெரிக்க வரி உயர்வு இந்தியாவுக்கு சிறிய பாதிப்பையே ஏற்படுத்தும்: மத்திய அமைச்சர் குமாரசாமி

இரும்பு மற்றும் அலுமினியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை அமெரிக்கா உயர்த்துவதால் இந்தியா சிறிய அளவிலேயே பாதிப்பை எதிர்கொள்ளும் என்று மத்திய எஃகு அமைச்சர் ஹெச்.டி. குமாரசாமி தெரிவித்துள்ளார். 

Jun 2, 2025 - 17:15
 0  3
இரும்பு மீதான அமெரிக்க வரி உயர்வு இந்தியாவுக்கு சிறிய பாதிப்பையே ஏற்படுத்தும்: மத்திய அமைச்சர் குமாரசாமி

புதுடெல்லி: இரும்பு மற்றும் அலுமினியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை அமெரிக்கா உயர்த்துவதால் இந்தியா சிறிய அளவிலேயே பாதிப்பை எதிர்கொள்ளும் என்று மத்திய எஃகு அமைச்சர் ஹெச்.டி. குமாரசாமி தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியத்திற்கான வரிகளை தற்போதுள்ள 25% இலிருந்து 50% ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் அறிவித்திருந்தார். இதன் காரணமாக, அமெரிக்காவுக்கான முக்கிய ஆசிய ஏற்றுமதியாளர்களான தென் கொரியா மற்றும் வியட்நாமில் உள்ள எஃகு உற்பத்தியாளர்களின் பங்குகளில் திங்களன்று சரிவு ஏற்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow