இயக்குநர் சாய் பரஞ்பாய்-க்கு பத்மபானி வாழ்நாள் சாதனையாளர் விருது!
இந்த ஆண்டுக்கான பத்மபானி வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெறுகிறார் பிரபல இயக்குநர், திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர், நாடக ஆசிரியரான சாய் பரஞ்பாய். இந்திய சினிமாவுக்கு அவர் அளித்த மகத்தான பங்களிப்புக்காக இந்த கவுரவம் அளிக்கப்படுகிறது.

மும்பை: இந்த ஆண்டுக்கான பத்மபானி வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெறுகிறார் பிரபல இயக்குநர், திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர், நாடக ஆசிரியரான சாய் பரஞ்பாய். இந்திய சினிமாவுக்கு அவர் அளித்த மகத்தான பங்களிப்புக்காக இந்த கவுரவம் அளிக்கப்படுகிறது.
இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள தனித்துவமான திரைப்படங்களின் கொண்டாட்டமான 10-வது அஜந்தா - எல்லோரா சர்வதேச திரைப்பட விழா (AIFF 2025) வரும் ஜனவரி 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த விழாவில்தான் சாய் பரஞ்பாய்க்கு பத்மபானி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட இருக்கிறது. இதற்கான அறிவிப்பினை, அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழா ஏற்பாட்டாளர் குழு தலைவர் நந்த்கிஷோர் கல்லிவால், வழிகாட்டி அன்குஷ்ராவ் கடம், கவுரவத் தலைவர் அசுடோஷ் கவுரிகேர் ஆகியோர் சனிக்கிழமை அறிவித்தனர்.
What's Your Reaction?