இமயமலையில் ஓட்டல் தொடங்கினார் கங்கனா ரனாவத்!
நடிகையும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரனாவத், இப்போது தமிழில் மாதவனுடன் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார்.

நடிகையும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரனாவத், இப்போது தமிழில் மாதவனுடன் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் விஜய் இயக்கும் இந்தப் படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு 18-ம் தேதி தொடங்க இருக்கிறது.
இந்நிலையில், நடிகை கங்கனா, இப்போது ஓட்டல் தொழிலில் இறங்கியுள்ளார். இமயமலையில் ‘தி மவுன்டெய்ன் ஸ்டோரி’ என்ற உணவகத்தைத் தொடங்கியிருக்கிறார். வரும் 14-ம் தேதி திறக்கப்படும் இந்த உணவகத்தில் உண்மையான இமாச்சல பிரதேச உணவு வகைகள் கிடைக்கும் என்று உறுதியளித்துள்ளார்.
What's Your Reaction?