இந்தியா மீது 50 சதவீத வரிவிதிப்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ஜனநாயகக் கட்சி எம்.பி. எதிர்ப்பு

ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகத்தை எதிர்த்து, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 50 சதவீத வரியை அதிபர் ட்ரம்ப் விதித்துள்ளார்.

Aug 10, 2025 - 11:20
 0  5
இந்தியா மீது 50 சதவீத வரிவிதிப்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ஜனநாயகக் கட்சி எம்.பி. எதிர்ப்பு

வாஷிங்டன்: ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகத்தை எதிர்த்து, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 50 சதவீத வரியை அதிபர் ட்ரம்ப் விதித்துள்ளார். இதனால் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான வரி மோதல் சூடு பிடித்துள்ளது. அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு துரதிருஷ்டவசமானது என்று இந்தியா தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவுக்கு 50 சதவீத வரியை விதித்தற்காக அமெரிக்காவில் எதிர்க்கட்சியாக செயல்படும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த எம்.பி. கிரெகோரி மீக்ஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow