இந்தியா மீதான 25% அபராத வரியை அமெரிக்கா நீக்கலாம்: அனந்த நாகேஸ்​வரன் தகவல்

இந்​தியா மீதான 25% அபராத வரியை வரும் நவம்​பர் 30-ம் தேதிக்​குப் பிறகு அமெரிக்கா விலக்​கிக் கொள்ள அதிக வாய்ப்​புள்​ள​தாக தலைமை பொருளா​தார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்​வரன் நம்​பிக்கை தெரி​வித்​துள்​ளார்.

Sep 19, 2025 - 08:45
 0  3
இந்தியா மீதான 25% அபராத வரியை அமெரிக்கா நீக்கலாம்: அனந்த நாகேஸ்​வரன் தகவல்

புதுடெல்லி: இந்​தியா மீதான 25% அபராத வரியை வரும் நவம்​பர் 30-ம் தேதிக்​குப் பிறகு அமெரிக்கா விலக்​கிக் கொள்ள அதிக வாய்ப்​புள்​ள​தாக தலைமை பொருளா​தார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்​வரன் நம்​பிக்கை தெரி​வித்​துள்​ளார். இந்​தியா மற்​றும் அமெரிக்கா இடையே நடை​பெற்று வரும் பேச்​சு​வார்த்​தைகளுக்கு மத்​தி​யில் வர்த்தக கட்​டுப்​பாடு​கள் தளர்த்​தப்​படு​வதற்​கான வாய்ப்பை தலைமை பொருளா​தார ஆலோசகரின் கருத்​துகள் வெளிப்​படுத்​து​வ​தாக அமைந்​துள்​ளது.

கொல்​கத்​தா​வில் வணி​கர்​களின் வர்த்​தகம் மற்​றும் தொழில்​துறை சபை ஏற்​பாடு செய்த நிகழ்​சி​யொன்​றில் தலைமை பொருளா​தார ஆலோசகர் அனந்த நாகேஸ்​வரன் பேசி​ய​தாவது: இந்​திய பொருட்​களின் இறக்​கு ம​திக்கு அமெரிக்கா 25 சதவீத பரஸ்பர வரி விதித்​தது. அதே போன்று மீண்​டும் 25 சதவீத அபராத வரியை இந்​தியா மீது அமெரிக்கா விதித்​துள்​ளது. இரண்​டும் எதிர்​பார்க்​கப்​ப​டாத ஒன்​று. புவி​சார் அரசி​யல் சூழ்​நிலைகள் இரண்​டாவது 25 சதவீத அபராத வரி விதிப்​புக்கு வழி​வகுத்​திருக்​கலாம் என்று நான் இன்​னும் நம்​பு​கிறேன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow