இந்தியா - பாகிஸ்தான் போட்டி வேண்டும் என்பதற்காக ஷெட்யூலை ‘ஏற்பாடு’ செய்ய வேண்டாம்: மைக்கேல் ஆத்தர்டன்

ஐசிசி தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் அதிகப் போட்டிகளில் மோதுமாறு ‘ஏற்பாடு’ செய்வது கூடாது என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் ஆத்தர்டன் கூறியுள்ளார். 

Oct 6, 2025 - 14:20
 0  3

ஒருபுறம் கைகுலுக்க மாட்டோம் என்று இந்தியத் தரப்பும், ஐசிசி ஆட்ட நடுவரை மன்னிப்புக் கேட்க வைப்போம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், கோப்பையை நக்வியிடமிருந்து வாங்க மாட்டோம் என்று இந்தியத் தரப்பும், அவர்கள் என் கையில் தான் கோப்பையை வாங்க வேண்டும் என்று நக்வியும், போதாக்குறைக்கு இருதரப்பு வீரர்களிடத்தில் களத்தில் ஏற்பட்ட மோதல்கள், கோணங்கித் தனங்கள், அதிகப்பிரசங்கித் தனங்கள் போன்றவற்றைத் தாண்டி இந்தியா - பாகிஸ்தான் மூன்று முறை ஆசியக் கோப்பையில் மோதுமாறு போட்டித் தொடரை அமைக்கும் ‘ஏற்பாட்டை’ அனுமதிக்கக் கூடாது என்று மைக்கேல் ஆத்தர்டன் கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow