இந்திய பொருளாதாரம் எதையும் தாங்கும்; ஜிடிபி வளர்ச்சி 8 சதவீதமாக உயரும்: நிர்மலா சீதாராமன் நம்பிக்கை
இந்திய பொருளாதாரம் எந்த மாற்றத்தையும் தாங்கும் திறன் படைத்தது என்றும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 8 சதவீதமாக அதிகரிக்க இலக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

புதுடெல்லி: இந்திய பொருளாதாரம் எந்த மாற்றத்தையும் தாங்கும் திறன் படைத்தது என்றும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 8 சதவீதமாக அதிகரிக்க இலக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற கவுடில்யா பொருளாதார மாநாட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசியதாவது: உலகளாவிய பிரச்சினைகள் எல்லாம் தீவிரம் அடைந்து வருகின்றன. வரி விதிப்புகள், தடைகள், பிரிக்கும் யுக்திகள் எல்லாம் உலகளாவிய நுகர்வு சங்கிலியை மாற்றியமைக்கின்றன. இந்த மாற்றங்கள் இந்தியாவின் பலவீனம் மற்றும் வலிமை ஆகிய இரண்டையும் வெளிப்படுத்துகிறது. மாற்றங்கள் மற்றும் அதிர்வுகளை தாங்கும் திறனை வரவேற்கிறோம். 2047-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறுவது, இந்தியா மூடப்பட்ட பொருளாதாரமாக இருக்க விரும்புகிறது என அர்த்தம் அல்ல.
What's Your Reaction?