இந்திய எம்பிக்கள் குழுவின் விளக்கத்தை ஏற்று பாக். ஆதரவு அறிக்கையை திரும்பப் பெற்றது கொலம்பியா

சசி தரூர் தலைமையிலான இந்திய எம்பிக்கள் குழுவின் விளக்கத்தை ஏற்று பாகிஸ்தான் ஆதரவு அறிக்கையை கொலம்பியா திரும்ப பெற்று உள்ளது.

Jun 1, 2025 - 01:25
 0  3
இந்திய எம்பிக்கள் குழுவின் விளக்கத்தை ஏற்று பாக். ஆதரவு அறிக்கையை திரும்பப் பெற்றது கொலம்பியா

சசி தரூர் தலைமையிலான இந்திய எம்பிக்கள் குழுவின் விளக்கத்தை ஏற்று பாகிஸ்தான் ஆதரவு அறிக்கையை கொலம்பியா திரும்ப பெற்று உள்ளது.

கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக கடந்த மே 7-ம் தேதி பாகிஸ்தானில் செயல்பட்ட 9 தீவிரவாத முகாம்களை இந்திய விமானப் படை அழித்தது. அப்போது சுமார் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆனால் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்ததாக உலக நாடுகளிடம் பாகிஸ்தான் அரசு கூறியது. இதை நம்பிய கொலம்பிய அரசு, பாகிஸ்தான் உயிரிழப்புக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow