இந்திய அணி, ஆர்சிபி கேப்டன்சியை துறந்தது குறித்து கோலி ஓபன் டாக்!
இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது குறித்து விராட் கோலி மனம் திறந்து பேசியுள்ளார். ஆர்சிபி அணி உடனான பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கோலி இதை பகிர்ந்துள்ளார்.

பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது குறித்து விராட் கோலி மனம் திறந்து பேசியுள்ளார். ஆர்சிபி அணி உடனான பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கோலி இதை பகிர்ந்துள்ளார்.
கடந்த 2021 டி20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணியின் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி விலகினார். அதே ஆண்டு ஆர்சிபி அணியின் கேப்டன்சியில் இருந்தும் விலகினார். பின்னர் 2022-ம் ஆண்டின் தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்கா உடனான டெஸ்ட் தொடரை இந்தியா இழந்த நிலையில் டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்தும் கோலி விலகினார்.
What's Your Reaction?