''இது ஒரு நேர்மறையான குறியீடு'' - போரை நிறுத்துவதற்கான ரஷ்யாவின் அறிகுறிக்கு ஜெலன்ஸ்கி வரவேற்பு

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து ரஷ்யா பரிசீலித்துவருவதற்கான அறிகுறியை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை வரவேற்றுள்ளார். இது ஒரு நேர்மறையான அறிகுறி என்றும் தெரிவித்துள்ளார்.

May 11, 2025 - 20:00
 0  3
''இது ஒரு நேர்மறையான குறியீடு'' - போரை நிறுத்துவதற்கான ரஷ்யாவின் அறிகுறிக்கு ஜெலன்ஸ்கி வரவேற்பு

கீவ்: உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து ரஷ்யா பரிசீலித்து வருவதற்கான அறிகுறியை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை வரவேற்றுள்ளார். இது ஒரு நேர்மறையான அறிகுறி என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் முழுமையான, நீடித்த மற்றும் நம்பகமான போர் நிறுத்தமே அமைதிக்கான முதல்படி என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் உக்ரைன் அதிபர் வெளியிட்டுள்ள பதிவில், "இறுதியாக போரினை முடிவுக்கு கொண்டுவருவது பற்றி ரஷ்யர்கள் பரிசீலிக்கத் தொடங்கியிருப்பது ஒரு நேர்மறையான அறிகுறியாகும். ஒட்டுமொத்த உலகமும் இதற்காக நீண்ட நாட்களாக காத்திருந்திருக்கிறது. போரினை முடிவுக்கு கொண்டுவருவதற்கான உண்மையான முதல் படி, போர் நிறுத்தமேயாகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow