ஆஸி. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறுவார்கள்: பிராட் ஹாடின் கருத்து
இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

சிட்னி: இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் முதல் போட்டி வரும் 22-ம் தேதி பெர்த் நகரில் தொடங்குகிறது. இதையொட்டி இந்திய அணி வீரர்கள் வாகா மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தொடர் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறியதாவது: இரு அணியிலும் வேகப்பந்து வீச்சு தாக்குதல் வலுவாக இருப்பதால் டாப் ஆர்டர் பேட்டிங் சரிவை சந்திக்கும் பட்சத்தில் இரு அணிகளின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களான ரிஷப் பந்த், அலெக்ஸ் கேரி ஆகியோர் முக்கிய பங்குவகிக்கக்கூடும். இவர்கள் இருவருமே ஆக்ரோஷமாக விளையாடக்கூடியவர்கள். ஒருவேளை 5 விக்கெட்களை இழக்கும் சமயத்தில், ஆட்ட நேரத்தின் இறுதிப்பகுதியில் புதிய பந்து எடுக்கப்படும் பட்சத்தில் 10 ஓவர்களில் இவர்கள் விரைவாக 50 ரன்களை சேர்த்துவிடுவார்கள். இது ஆட்டத்தின் போக்கை மாற்றிவிடும்.
What's Your Reaction?