‘ஆடு ஜீவிதம்’ படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ‘HMMA’ விருது! 

பிருத்விராஜ் நடிப்பில் வெளியான ‘ஆடு ஜீவிதம்’ படத்தின் பின்னணி இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ‘HMMA” ( Hollywood Music in Media Awards 2024) விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. 

Nov 21, 2024 - 16:25
 0  4
‘ஆடு ஜீவிதம்’ படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ‘HMMA’ விருது! 

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிருத்விராஜ் நடிப்பில் வெளியான ‘ஆடு ஜீவிதம்’ படத்தின் பின்னணி இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ‘HMMA” (Hollywood Music in Media Awards 2024) விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ப்ளஸ்ஸி இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் ‘ஆடு ஜீவிதம்’. இந்தப் படத்தின் பின்னணி இசைக்காக ஹாலிவுட்டின் உயரிய விருதான ‘HMMA’ விருது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. இதில் சுயாதீன திரைப்படத்துக்கான (அந்நிய மொழி) பிரிவில் போட்டியிட்ட ‘ஆடு ஜீவிதம்’ திரைப்படத்துக்கு சிறந்த பின்னணி இசைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் விருதுக்கான முன்னோட்டமாக இந்த விருது கருதப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow