அஸ்வினி முதல் ரேவதி வரை: ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 27 நட்சத்திரங்களுக்கு எப்படி?
அஸ்வினி முதல் ரேவதி வரை: 27 நட்சத்திரங்களுக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 2025

மேஷம்: அஸ்வினி: இந்த பெயர்ச்சியில் சிறுவிபத்துகள் ஏற்படக்கூடிய நிலை தென்படுவதால் பயணங்களின் போது மிகுந்த கவனமும் நிதானமும் தேவை. உணவு விஷயத்தில் கவனமாகவும் கட்டுப்பாடாகவும் இருப்பதன் மூலம் வயிற்றுக் கோளாறுகளிலிருந்து விடுபட முடியும். புத்திர வழியில் மகிழ்ச்சியடையக்கூடிய நிலை உண்டு. உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறும் வகையில் உங்கள் பணிகளில் கவனம் செலுத்துவது நல்லது. பெண்களால் அனுகூலமடையும் வாய்ப்பு சிலருக்கு அமையக்கூடும். பொதுவாக எதிலும் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் சங்கடங்கள் பெரும்பாலும் விலகும். மகான்களின் அருளாசிகள் கிட்டும்.
பரணி: எதிர்பார்க்கும் உதவிகள் எதுவாயினும் கிடைக்க வாய்ப்புண்டு. ஆலய தரிசனம் கண்டுவர குடும்பத்துடன் ஒரு பயணத்தை மேற்கொண்டு திரும்புவீர்கள். அரசு வழியில் நன்மைகளை எதிர்பார்க்கலாம். நீர்நிலைகளில் எச்சரிக்கை தேவை. அவசர பயணம் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. சகோதர வழியில் திருப்தி தரக்கூடிய ஒத்துழைப்பு கிடைத்து வரும். சிலர் அசையாச் சொத்துக்களை வாங்கலாம். பணப்புழக்கம் மனநிறைவு தரும் வகையிலே இருந்து வரும். கொடுக்கல் வாங்கலிலும் பிரச்சினை எதுவும் இராது என்றாலும் பெருந்தொகை கடன் கொடுக்கும்போது போதிய ஆவணங்கள் இல்லாமல் கொடுக்க வேண்டாம்.
What's Your Reaction?