‘அஸ்தமிக்கும் சூரியன்’ - ‘ஜனநாயகன்’ புதிய போஸ்டரால் இணையத்தில் விவாதம்!
நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் புதிய போஸ்டர் இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

சென்னை: நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் புதிய போஸ்டர் இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. ஜூன் 22-ம் தேதி விஜய் தனது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார். அன்றைய தினம் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் சிங்கிள் அல்லது கிளிம்ப்ஸ் வெளியாகும் என்று தெரிகிறது. இது குறித்து படக்குழு ‘தி ஃபர்ஸ்ட் ரோர்’ என்று சூசகமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
What's Your Reaction?