“அல்லு அர்ஜுன் மீது மட்டும் குற்றஞ்சாட்டுவது நியாயம் அல்ல” - பவன் கல்யாண் கருத்து
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் வசூல் ரீதியாக மகத்தான சாதனை படைத்துள்ளது. இருப்பினும் இந்தப் படத்தின் சிறப்பு காட்சி வெளியான போது ஹைதராபாத் நகரில் உள்ள சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.இந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் சிறை சென்று, இடைக்கால ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் வசூல் ரீதியாக மகத்தான சாதனை படைத்துள்ளது. இருப்பினும் இந்தப் படத்தின் சிறப்பு காட்சி வெளியான போது ஹைதராபாத் நகரில் உள்ள சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் சிறை சென்று, இடைக்கால ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
அல்லு அர்ஜுன் திரையரங்கம் சென்றதால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என தெலங்கானா மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் முதல்முறையாக தனது கருத்தை தெரிவித்துள்ளார் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண்.
What's Your Reaction?