அரசின் பாதுகாப்பு விதிகளை ஏற்ற மஸ்கின் ஸ்டார்லிங்க் - விரைவில் இந்தியாவில் அறிமுகம்

இந்திய அரசின் பாதுகாப்பு விதிமுறைகளை எலான் மஸ்கின் சாட்டிலைட் இன்டர்நெட் நிறுவனமான ‘ஸ்டார்லிங்க்’ ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Nov 13, 2024 - 14:50
 0  5
அரசின் பாதுகாப்பு விதிகளை ஏற்ற மஸ்கின் ஸ்டார்லிங்க் - விரைவில் இந்தியாவில் அறிமுகம்

புதுடெல்லி: இந்திய அரசின் பாதுகாப்பு விதிமுறைகளை எலான் மஸ்கின் சாட்டிலைட் இன்டர்நெட் நிறுவனமான ‘ஸ்டார்லிங்க்’ ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொலைத்தொடர்புத் துறையுடன் ஸ்டார்லிங்க் பலமுறை மேற்கொண்ட ஆலோசனை கூட்டம் இதற்கு வழிவகை செய்துள்ளது. செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவை உரிமத்தை வழங்குவதற்கான முக்கிய பாதுகாப்பு வழிகாட்டுதல் சார்ந்த விதிமுறைகளை கடைப்பிடிக்க ஸ்டார்லிங்க் ஒப்புக்கொண்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்த அறிக்கையை ஸ்டார்லிங்க் நிறுவனம் முறைப்படி வழங்க வேண்டியுள்ளது. கடந்த 2022-ல் இந்த உரிமம் கோரி ஸ்டார்லிங்க் விண்ணப்பித்திருந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow