அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தும்போது பெண்கள், குழந்தைகளுக்கு கை விலங்கு போடவில்லை: மத்திய அரசு விளக்கம்
சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்தும்போது பெண்கள், குழந்தைகளின் கைகளில் விலங்கு போடவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

புதுடெல்லி: சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்தும்போது பெண்கள், குழந்தைகளின் கைகளில் விலங்கு போடவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வருகிறார். அதன்படி முறையான ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த இந்தியர்களையும் அமெரிக்கா ராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பியது. அப்போது இந்திய பெண்கள், குழந்தைகள் உட்பட அனைவரின் கை, கால்களில் விலங்கிட்டு நாடு கடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
What's Your Reaction?