அமெரிக்காவின் வரி சட்டவிரோதம் என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்யக் கோரி ட்ரம்ப் நிர்வாகம் மனு

உலக நாடு​களுக்கு இறக்​குமதி வரியை அமெரிக்கா  உயர்த்​தி​யது சட்​ட​விரோதம் என மேல்​முறை​யீட்டு நீதி​மன்​றம் அறி​வித்​ததை ரத்து செய்​யக்​கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் அதிபர் ட்ரம்ப் நிர்​வாகம் மனுத் தாக்​கல் செய்​துள்​ளது. 

Sep 5, 2025 - 07:25
 0  4
அமெரிக்காவின் வரி சட்டவிரோதம் என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்யக் கோரி ட்ரம்ப் நிர்வாகம் மனு

வாஷிங்டன்: உலக நாடு​களுக்கு இறக்​குமதி வரியை அமெரிக்கா உயர்த்​தி​யது சட்​ட​விரோதம் என மேல்​முறை​யீட்டு நீதி​மன்​றம் அறி​வித்​ததை ரத்து செய்​யக்​கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் அதிபர் ட்ரம்ப் நிர்​வாகம் மனுத் தாக்​கல் செய்​துள்​ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்​வாகத்​தின் வர்த்தக கொள்​கை​யில் பரஸ்பர வரிவ​திப்பு முறை கொண்​டு​வரப்​பட்​டது. இந்த புதிய வர்த்தக கொள்​கையை ஏற்​கும்​படி ஐரோப்​பிய யூனியன், ஜப்​பான் மற்​றும் இதர நாடு​களை அதிபர் ட்ரம்ப் வலி​யுறுத்​தி​னார். இதன் காரண​மாக அமெரிக்​கா​வின் வரி வரு​வாய் கடந்த ஆகஸ்ட்​டில் 159 பில்​லியன் டால​ராக உயர்ந்​தது. இது கடந்​தாண்டு இதே காலத்​தில் வசூலிக்​கப்​பட்ட வரியை விட இரண்டு மடங்​குக்கு மேல் அதி​கம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow