அமெரிக்காவின் பரஸ்பர வரி அமலானால் எந்தெந்த நாடுகளுக்கு பாதிப்பு?
நாளை (ஏப்ரல் 2) முதல் அமலுக்கு வர உள்ள, அமெரிக்க பரஸ்பர வரிகளில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்தியாவின் விவசாய பொருட்கள் மீது 100% வரை வரிகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது.

புதுடெல்லி: நாளை (ஏப்ரல் 2) முதல் அமலுக்கு வர உள்ள, அமெரிக்க பரஸ்பர வரிகளில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்தியாவின் விவசாயப் பொருட்கள் மீது 100% வரை வரிகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது.
அமெரிக்காவின் அதிபராக 2-வது முறையாக பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப், தங்கள் நாட்டின் பொருட்களுக்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் அதிக வரி விதிப்பதாக குற்றம்சாட்டினார். இதற்கு பதிலடியாக, அமெரிக்காவில் இறக்குமதியாகும் பிற நாடுகளின் பொருட்களுக்கு, சம்பந்தப்பட்ட நாடுகள் விதிக்கும் அதே அளவுக்கு (பரஸ்பர வரி) ஏப்ரல் 2-ம் தேதி முதல் வரி விதிக்கப்படும் என அறிவித்தார். தற்போது, அமெரிக்கா வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
What's Your Reaction?