அமெரிக்க விமான விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
அலாஸ்கா மாகாணத்தின் நடந்த விமான விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க நாட்டின் கடற்படை நேற்று அறிவித்துள்ளது.

ஜுனோவ்: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் உனலக்லீட் விமான நிலையத்தில் இருந்து நோம் நகருக்கு செஸ்னா 208பி என்ற ரக விமானம் கடந்த வியாழக்கிழமை புறப்பட்டது. பெரிங் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானத்தில் விமானி உள்பட 10 பேர் பயணித்தனர்.
நார்டன் சவுண்ட் அருகே உள்ள மலைப்பகுதியில் சென்றபோது அங்கு கடும் பனிப்பொழிவு நிலவியது. எனவே விமானத்தை இயக்குவதில் விமானிக்கு சிக்கல் ஏற்பட்டதாகத் தெரியவந்தது. இதையடுத்து விமானி, உடனடியாக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அதற்குள் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை விமானம் இழந்தது. இதனால் விமானம் மாயமானதாக அறிவிக்கப்பட்டது.
What's Your Reaction?