‘அது நான்தான்’ - 18-வது முறையாக இந்தியா - பாக் போர் நிறுத்த பெருமை பேசிய ட்ரம்ப்!

“நான் நிறைய மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளேன். அந்த வரிசையில் இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை முக்கியமானதாகக் குறிப்பிடலாம்.” என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.

Jun 26, 2025 - 11:35
 0  3
‘அது நான்தான்’ - 18-வது முறையாக இந்தியா - பாக் போர் நிறுத்த பெருமை பேசிய ட்ரம்ப்!

ஹேக்: “நான் நிறைய மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளேன். அந்த வரிசையில் இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை முக்கியமானதாகக் குறிப்பிடலாம்.” என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார். இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது தானே என்று ட்ரம்ப் கூறுவது இது 18-வது முறையாகும்.

இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் அறிவிப்பை ட்ரம்ப் வெளியிட்டதில் இருந்தே, இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்த விவகாரத்தில் அமெரிக்க நாடு எந்தப் பங்கும் வகிக்கவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம் பிரதமர் மோடி அண்மையில் தொலைபேசி உரையாடலில் தெளிவுப்படுத்தி இருந்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow