அதிபர் தேர்தலுக்கு பிறகு அமெரிக்காவில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்
கடந்த வாரம் அமெரிக்க அதிபர் தேர்தல் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளதற்குப் பிறகு தலைநகர் வாஷிங்டனில் கடந்த செவ்வாய்க்கிழமை தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியது.

வாஷிங்டன்: கடந்த வாரம் அமெரிக்க அதிபர் தேர்தல் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளதற்குப் பிறகு தலைநகர் வாஷிங்டனில் கடந்த செவ்வாய்க்கிழமை தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியது. அதிபர் தேர்தலுக்கு பிறகு நடைபெற்ற மிக முக்கியமான மாபெரும் பண்டிகை கொண்டாட்டம் இதுவாகும்.
இந்து அமெரிக்க அறக்கட்டளை, அமெரிக்க சீக்கிய அமைப்புகள், வட அமெரிக்காவின் ஜெயின் அசோசியேஷன், வாழும் கலை உள்ளிட்ட பல இந்திய அமெரிக்க அமைப்புகளுடன் இணைந்து ஸ்ரீ சுவாமிநாராயண் கோயில் இந்த தீபாவளி கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.
What's Your Reaction?