‘அதிகார வரம்பை மீறுகிறீர்கள் ட்ரம்ப்’ - இறக்குமதி வரிக்கு தடை விதித்த அமெரிக்க நீதிமன்றம் சாடல்
டொனால்டு ட்ரம்ப் விதித்த இறக்குமதி வரிகளுக்கு தடை விதித்துள்ளது அந்நாட்டு நீதிமன்றம், மேலும், அதிபருக்கு உள்ள சட்டத்துக்கு உட்பட்ட அதிகார வரம்புகளை மீறி ட்ரம்ப் செயல்படுவதாகவும் கோர்ட் அவரைக் கடிந்துள்ளது.

டொனால்டு ட்ரம்ப் விதித்த இறக்குமதி வரிகளுக்கு தடை விதித்துள்ளது நியூயார்க்கில் உள்ள சர்வதேச வர்த்தக நீதிமன்றம், மேலும், அதிபருக்கு உள்ள சட்டத்துக்கு உட்பட்ட அதிகார வரம்புகளை மீறி ட்ரம்ப் செயல்படுவதாகவும் கோர்ட் அவரைக் கடிந்துள்ளது.
அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஜன.20-ம் தேதி 2-வது முறையாக அதிபராக பதவியேற்றார். அதிபர் பதவியேற்ற பிறகு அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் முதல் முறையாக உரையாற்றுகையில், “அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா 100 சதவீத வரி விதிக்கிறது. இதேபோல் மற்ற நாடுகளும் அதிக வரி விதிக்கின்றன. இது நியாயமற்றது. ஆட்டோமொபைல் பொருட்களுக்கு 100 சதவீதத்துக்கும் அதிகமாகவே இந்தியா வரி விதிக்கிறது. ஐரோப்பிய யூனியன், இந்தியா, சீனா, பிரேசில், மெக்சிகோ, கனடா போன்ற நாடுகள், நாம் விதிக்கும் வரியை விட அதிக வரிகளை விதிக்கின்றன. அதை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எனவே, மற்ற நாடுகள் எவ்வளவு வரி விதிக்கின்றனவோ, அதே அளவுக்கு அமெரிக்காவும் வரி விதிக்கும்.” என்றார்.
What's Your Reaction?