அணுசக்தி அல்லாத புளோடார்ச் வெடிகுண்டு: சீன விஞ்​ஞானிகள் சோதனை வெற்றி

அணுசக்தி அல்லாத புளோடார்ச் வெடிகுண்டை, சீனா வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்துள்ளது. சீன விஞ்ஞானிகள் ஹைட்ரஜன் எரிபொருளை அடிப்படையாகக் கொண்ட அணுசக்தி அல்லாத வெடிகுண்டை உருவாக்கும் சோதனையை கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தனர்.

Apr 22, 2025 - 09:35
 0  4
அணுசக்தி அல்லாத புளோடார்ச் வெடிகுண்டு: சீன விஞ்​ஞானிகள் சோதனை வெற்றி

பெய்ஜிங்: அணுசக்தி அல்லாத புளோடார்ச் வெடிகுண்டை, சீனா வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்துள்ளது. சீன விஞ்ஞானிகள் ஹைட்ரஜன் எரிபொருளை அடிப்படையாகக் கொண்ட அணுசக்தி அல்லாத வெடிகுண்டை உருவாக்கும் சோதனையை கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் அண்மையில் இந்த சோதனையை சீன விஞ்ஞானிகள் வெற்றிகரமாக நடத்திக் காட்டியுள்ளனர். இதற்கு அணுசக்தி அல்லாத புளோடார்ச் வெடிகுண்டு என்று பெயர் வைத்துள்ளனர். இந்த வெடிகுண்டால் ஏற்படும் தீப்பிழம்பு 2 விநாடிகளுக்கு மேல் நீடிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சீனாவிலிருந்து வெளியாகும் சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow