அட்சய திருதியை: கோவையில் 60 கிலோ தங்க நகைகள் விற்பனை - இந்த ஆண்டு 40% குறைவு
அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு கோவையில் இன்று (ஏப்.30) ஒரே நாளில் 60 கிலோ தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டதாகவும், விலை உயர்வு காரணமாக கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 40 சதவீதம் விற்பனை குறைந்துள்ளதாகவும் தொழில்துறையினர் தெரிவித்தனர்.

கோவை: அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு கோவையில் இன்று (ஏப்.30) ஒரே நாளில் 60 கிலோ தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டதாகவும், விலை உயர்வு காரணமாக கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 40 சதவீதம் விற்பனை குறைந்துள்ளதாகவும் தொழில் துறையினர் தெரிவித்தனர்.
ஆண்டுதோறும் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இதன் காரணமாக அந்நாளில் வழக்கத்தை விட அதிகளவு நகை விற்பனை காணப்படும். வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையிலும் கோவையில் இன்று தங்க நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர். இதனால் ராஜவீதி, காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தங்க நகை கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
What's Your Reaction?