அடிலெய்டு டெஸ்ட் போட்டியை இரண்டரை நாட்களில் முடித்த ஆஸ்திரேலியா வெற்றி! 

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது. இரண்டரை நாட்களில் டெஸ்ட் போட்டி முடிந்துவிட்டது.  இதன் மூலம் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் 1-1 என்ற நிலையில் சமநிலை வகிக்கின்றன. 

Dec 8, 2024 - 12:50
 0  3
அடிலெய்டு டெஸ்ட் போட்டியை இரண்டரை நாட்களில் முடித்த ஆஸ்திரேலியா வெற்றி! 

அடிலெய்டு: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது. இரண்டரை நாட்களில் டெஸ்ட் போட்டி முடிந்துவிட்டது. இதன் மூலம் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் 1-1 என்ற நிலையில் சமநிலை வகிக்கின்றன.

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பெர்த் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு நகரில் வெள்ளிக்கிழமை (டிச.6) தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 180 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதையடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த 337 ரன்களை குவித்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow