அக்டோபர் மாதத்தில் தினசரி யுபிஐ பரிவர்த்தனை ரூ.94 ஆயிரம் கோடியாக உயர்வு

இந்​தி​யா​வில் இணை​ய​வழி​யில் மேற்​கொள்​ளப்​படும் ஒட்​டுமொத்த பணப் பரிவர்த்​தனை​யில் யுபிஐ 85% பங்கு வகிக்​கிறது. இது நாளுக்கு நாள் அதி​கரித்து வரு​கிறது.  

Oct 23, 2025 - 07:00
 0  3
அக்டோபர் மாதத்தில் தினசரி யுபிஐ பரிவர்த்தனை ரூ.94 ஆயிரம் கோடியாக உயர்வு

புதுடெல்லி: இந்​தி​யா​வில் இணை​ய​வழி​யில் மேற்​கொள்​ளப்​படும் ஒட்​டுமொத்த பணப் பரிவர்த்​தனை​யில் யுபிஐ 85% பங்கு வகிக்​கிறது. இது நாளுக்கு நாள் அதி​கரித்து வரு​கிறது.

தீபாவளி பண்​டிகை காரண​மாக நடப்பு அக்​டோபர் மாதத்​தில் அதிகபட்சமாக ஒரே நாளில் யுபிஐ பரிவர்த்​தனை எண்ணிக்கை 74 கோடியைத் தாண்டி உள்​ளது. இது​போல, அதி​கபட்​ச​மாக தினசரி யுபிஐ பரிவர்த்​தனை மதிப்பு இது​வரை 6 முறை ரூ.1 லட்​சம் கோடியைத் தாண்டி உள்​ளது. அதே​நேரம் சராசரி தினசரி யுபிஐ பணப் பரிவர்த்​தனை​யின் மதிப்பு இது​வரை இல்​லாத வகை​யில் ரூ.94 ஆயிரம் கோடி​யாக அதி​கரித்து புதிய சாதனை படைக்​கப்​பட்​டுள்​ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow