‘அகத்தியா’ டீசர் எப்படி? - பா.விஜய் + ஜீவா கூட்டணியின் அமானுஷ்ய த்ரில்லர்

ஜீவா, அர்ஜுன் நடிப்பில் உருவாகும் ‘அகத்தியா’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது

Jan 4, 2025 - 23:55
 0  3
‘அகத்தியா’ டீசர் எப்படி? - பா.விஜய் + ஜீவா கூட்டணியின் அமானுஷ்ய த்ரில்லர்

சென்னை: ஜீவா, அர்ஜுன் நடிப்பில் உருவாகும் ‘அகத்தியா’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது

பாடலாசிரியர் பா.விஜய் இயக்கும் புதிய படத்தில் ஜீவா நடிக்கிறார். உலக அளவில் பிரபலமான ‘ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில்’ கதைக்கருவுடன் உருவாகும் இந்த படத்துக்கு ‘அகத்தியா’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. ஹாரர் த்ரில்லர் படமான இதனை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் அர்ஜுன், ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதற்கான டைட்டில் அறிவிப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வரும் ஜனவரி 31 திரையரங்குகளில் வெளியாகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow