‘ஃபீனிக்ஸ்’ ட்ரெய்லர் எப்படி? - சூர்யா சேதுபதியின் ஆக்‌ஷன் அறிமுகம்!

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஹீரோவாக அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ் வீழான்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. 

Jun 27, 2025 - 23:45
 0  4
‘ஃபீனிக்ஸ்’ ட்ரெய்லர் எப்படி? - சூர்யா சேதுபதியின் ஆக்‌ஷன் அறிமுகம்!

சென்னை: விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஹீரோவாக அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரவுடி தான்’, ‘சிந்துபாத்’ படங்களில் அவரது மகன் சூர்யா சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். தற்போது அவர் ‘ஃபீனிக்ஸ்’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை பிரபல ஸ்டன்ட் இயக்குநர் அனல் அரசு இயக்குகிறார். ஆக்‌ஷன் - ஸ்போர்ட்ஸ் ட்ராமாவாக உருவாகும் இப்படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். இந்தப் படம் கடந்த நவம்பர் 14-ம் தேதியே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. வரும் ஜூலை 4 ரிலீஸ் ஆகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow