Bad Girl Teaser: நாயகி ‘பின்புல’ சர்ச்சையும், விவாதமும் சரியா?
ஒரு டீசரிலேயே விமர்சனக் கணைகளுக்கு உள்ளாகி இருக்கின்றனர் ‘பேட் கேர்ள்’ (Bird Girl) படத்தின் தயாரிப்பாளர்கள் வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் மற்றும் இயக்குநர் வர்ஷா பரத். புதுமுக பெண் இயக்குநர் வர்ஷா பாரத் இயக்கத்தில் அஞ்சலி சிவராமன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

காதலை வழக்கமாக சொல்லும் பாணியிலிருந்து விலகி வேறு பாணியிலோ, வீரத்தை எப்போதும் தொடர்புபடுத்தப்படும் சமூகத்தில் இருந்து வேறொரு சமூகத்தின் பார்வையிலிருந்தோ பிரதிபலித்து எப்போதெல்லாம் ஒரு கலை வடிவம் உருவாகிறதோ அப்போதெல்லாம் அதனைச் சுற்றி விவாதங்களும், விமர்சனங்களும் சமூகத்தில் எழத்தான் செய்கின்றன.
காரணம்... ‘காதல் இப்படித்தான் இருக்க வேண்டும், வீரம் இதுதான்!’ என்று பொது புத்தியில் காலங்காலமாக கடத்தப்பட்டிருக்கும் கற்பிதங்கள். அவைதான் இத்தகைய விமர்சனங்களையும், விவாதங்களையும் ஊக்குவிக்கின்றன. இது சினிமாவுக்கு மட்டுமல்ல எழுத்தாளர்களுக்கும், ஏன் ஓவியர்கள், சிற்பிகள் என கலைஞர்கள் பலருக்கும் கூட நேர்வதுதான். அப்படியாக ஒரு டீசரிலேயே விமர்சனக் கணைகளுக்கு உள்ளாகியிருக்கின்றனர் ‘பேட் கேர்ள்’ (Bird Girl) படத்தின் தயாரிப்பாளர்கள் வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் மற்றும் இயக்குநர் வர்ஷா பரத்.
What's Your Reaction?