7 மொழிகளில் வெளியாகும் ‘காந்தாரா: சாப்டர் 1’!

ரிஷப் ஷெட்டி, கன்னடத்தில் இயக்கி, நடித்த ‘காந்தாரா’, தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றது.

Jul 8, 2025 - 09:35
 0  4
7 மொழிகளில் வெளியாகும் ‘காந்தாரா: சாப்டர் 1’!

ரிஷப் ஷெட்டி, கன்னடத்தில் இயக்கி, நடித்த ‘காந்தாரா’, தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றது. ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படத்தின் முதல் பாகம் இப்போது உருவாகி வருகிறது. ‘காந்தாரா: சாப்டர் 1’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் ரிஷப் ஷெட்டியின் 42-வது பிறந்தநாளை முன்னிட்டு ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி அக். 2-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow