6 பில்லியன் டாலர் ஐபோன் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி: 50 சதவீதத்துடன் தமிழ்நாடு முதலிடம்

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பு மையமாக சீனா உள்ள நிலையில்,  சீனாவை முழுமையாக சார்ந்திருக்காமல், இந்தியா, வியட்நாம் என வெவ்வேறு நாடுகளில் தனக்கான விநியோக மையங்களை உருவாக்கும் நடவடிக்கையை அந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

Nov 11, 2024 - 15:53
 0  6
6 பில்லியன் டாலர் ஐபோன் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி: 50 சதவீதத்துடன் தமிழ்நாடு முதலிடம்

புதுடெல்லி: ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பு மையமாக சீனா உள்ள நிலையில், சீனாவை முழுமையாக சார்ந்திருக்காமல், இந்தியா, வியட்நாம் என வெவ்வேறு நாடுகளில் தனக்கான விநியோக மையங்களை உருவாக்கும் நடவடிக்கையை அந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

ஆப்பிள் நிறுவனம் 2017-ம்ஆண்டு இந்தியாவில் பழைய ஐபோன் மாடல்களின் தயாரிப்பைத் தொடங்கியது. ஆப்பிள் சிஇஓ டிம் குக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவுக்கு வருகை தந்தார். அதன் பிறகு இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் தயாரிப்பில் முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்தன. புதிய மாடல்களும் தற்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow