50 நாள் கடந்தும் மவுசு குறையாத ‘சாவா’ - பின்னுக்குச் சென்ற சல்மான் கான் படம்!
திரையரங்குகளில் வெளியாகி 50 நாட்களை கடந்த பிறகும் கூட ‘சாவா’ படத்துக்கான வரவேற்பு வடமாநிலங்களில் குறையாமல் உள்ளது.

மும்பை: திரையரங்குகளில் வெளியாகி 50 நாட்களை கடந்த பிறகும் கூட ‘சாவா’ படத்துக்கான வரவேற்பு வடமாநிலங்களில் குறையாமல் உள்ளது.
மராட்டிய மாமன்னர் சிவாஜியின் மகன் சத்ரபதி சம்பாஜியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு பாலிவுட்டில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி ‘சாவா’ என்ற திரைப்படம் வெளியானது. லக்ஷமன் உடேகர் இயக்கிய இப்படத்தில் விக்கி கவுஷல் சம்பாஜி மகாராஜாவாகவும், அக்ஷய் கண்ணா அவுரங்கசீப்பாகவும் நடித்திருந்தனர்.
What's Your Reaction?