450 கி.மீ தூரம் பாய்ந்து தாக்கவல்ல ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்ததாக பாகிஸ்தான் தகவல்

தரையிலிருந்து தரைக்கு 450 கி.மீ தூரம் வரை பாய்ந்து சென்று இலக்குகளைத் தாக்கவல்ல ஏவுகணை சோதனையை வெற்றிகரமாகச் செய்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை அப்தலி வெப்பன் சிஸ்டம் (Abdali Weapon System) என்று அந்நாட்டு ராணுவத்தால் அழைக்கப்படுகிறது. இந்தச் சோதனையை எக்சர்சைஸ் இண்டஸ்-ன் (Exercise INDUS) ஒரு பகுதியாக செய்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

May 3, 2025 - 17:40
 0  3
450 கி.மீ தூரம் பாய்ந்து தாக்கவல்ல ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்ததாக பாகிஸ்தான் தகவல்

புதுடெல்லி: தரையிலிருந்து தரைக்கு 450 கி.மீ தூரம் வரை பாய்ந்து சென்று இலக்குகளைத் தாக்கவல்ல ஏவுகணை சோதனையை வெற்றிகரமாகச் செய்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை அப்தலி வெப்பன் சிஸ்டம் (Abdali Weapon System) என்று அந்நாட்டு ராணுவத்தால் அழைக்கப்படுகிறது. இந்தச் சோதனையை எக்சர்சைஸ் இண்டஸ்-ன் (Exercise INDUS) ஒரு பகுதியாக செய்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உத்தரவின் பேரில், லஷ்கர் -இ-தொய்பா திட்டமிட்டுள்ளது என இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தனது முதல் கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow