30 கோடி சப்ஸ்கிரைபர்களை நெருங்கிய ஜியோ ஹாட்ஸ்டார்: நெட்ஃப்ளிக்ஸ் தளத்துக்கு கடும் சவால்!

ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீமிங் தளத்தின் ஒட்டுமொத்த சப்ஸ்கிரைபர் எண்ணிக்கை சுமார் 30 கோடியை நெருங்கி உள்ளது.

Jun 25, 2025 - 14:10
 0  4
30 கோடி சப்ஸ்கிரைபர்களை நெருங்கிய ஜியோ ஹாட்ஸ்டார்: நெட்ஃப்ளிக்ஸ் தளத்துக்கு கடும் சவால்!

மும்பை: ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீமிங் தளத்தின் ஒட்டுமொத்த சப்ஸ்கிரைபர் எண்ணிக்கை சுமார் 30 கோடியை நெருங்கி உள்ளது. இதன் மூலம் உலக அளவில் பிரபலமாக உள்ள ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றான நெட்ஃப்ளிக்ஸின் 30.162 கோடி சப்ஸ்கிரைபர் எண்ணிக்கையை கிட்டத்தட்ட நெருங்கி உள்ளதாக ஜியோ ஹாட்ஸ்டார் புதன்கிழமை அன்று தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் ஜியோ ஹாட்ஸ்டாரின் சப்ஸ்கிரைபர் எண்ணிக்கை வெறும் 5 கோடி என்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இடைப்பட்ட காலத்தில் அண்மையில் நிறைவடைந்த ஐபிஎல் 2025-ம் ஆண்டுக்கான சீசனை ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீம் செய்தது. அதன் பலனாக 30 கோடி சப்ஸ்கிரைபர்கள் என்ற எண்ணிக்கையை அந்த தளம் எட்டியுள்ளது கவனிக்கத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow