2024-ல் வசூல் அள்ளிய தென்னிந்திய திரைப்படங்கள் - ஓர் அலசல்
இந்தி சினிமா மட்டுமே இந்திய சினிமா என்ற நிலை கரோனாவுக்கு பிறகு மொத்தமாக மாறிவிட்டது. அதற்கு முன் தென்னிந்தியாவில் இருந்து ‘பாகுபலி’ போன்ற படங்கள் தங்கள் இருப்பைக் காட்டிவிட்டுப் போனாலும், கடந்த சில வருடங்களாகத் தென்னிந்திய சினிமாவின் தாக்கம் இந்தியா முழுவதும் பரவியிருக்கிறது

இந்தி சினிமா மட்டுமே இந்திய சினிமா என்ற நிலை கரோனாவுக்கு பிறகு மொத்தமாக மாறிவிட்டது. அதற்கு முன் தென்னிந்தியாவில் இருந்து ‘பாகுபலி’ போன்ற படங்கள் தங்கள் இருப்பைக் காட்டிவிட்டுப் போனாலும், கடந்த சில வருடங்களாகத் தென்னிந்திய சினிமாவின் தாக்கம் இந்தியா முழுவதும் பரவியிருக்கிறது. அதன்படி 2024-ம் ஆண்டு பான் இந்தியா முறையில் வெளியாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்த தென்னிந்திய திரைப்படங்கள் இவை.
பிரேமலு, மகாராஜா: மலையாளத்தில் உருவான ‘பிரேமலு’, இந்த வருடத்தின் முதல் சூப்பர் ஹிட்டை தென்னிந்திய சினிமாவுக்கு வழங்கிய திரைப்படம். நஸ்லன், மமிதா பைஜு நடித்த இந்தப் படத்தை கிரிஷ் இயக்கி இருந்தார். இன்றைய மென்பொருள் யுகத்துக் காதலை நகைச்சுவையாகவும் நையாண்டியாகவும் சொன்ன இந்தப் படம், மற்ற மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றது. தமிழில் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’, ஒரு படத்துக்கு திரைக்கதைதான் ராஜா என்பதைக் கம்பீரமாக நிரூபித்த படம். தெரிந்த கதைதான் என்றாலும் ‘நான் லீனியர்’ ட்ரீட்மென்ட்டில் ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டது. தமிழில் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய ‘மகாராஜா’ மற்ற மொழி பார்வையாளர்களையும் ஈர்த்தது.
What's Your Reaction?