2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி கெபெர்ஹா நகரில் இன்று இரவு நடைபெற உள்ளது.

கெபெர்ஹா: இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி கெபெர்ஹா நகரில் இன்று இரவு நடைபெற உள்ளது.
இரு அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் டர்பன் நகரில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 203 ரன்கள் இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க அணி 141 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த வெற்றியால் டி20 தொடரில் இந்திய அணி 1-0 எனமுன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2-வது ஆட்டத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு கெபர்ஹொ நகரில் இரு அணிகளும் மோதுகின்றன.
What's Your Reaction?