“2 நாட்களாக கண்ணீருடன் இருந்தேன்” - ‘மதகஜராஜா’ வரவேற்பு குறித்து சுந்தர்.சி நெகிழ்ச்சி!

‘மதகஜராஜா’ படத்துக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து கடந்த 2 நாட்களாக கண்களில் கண்ணீருடன் தான் இருந்தேன் என்று இயக்குநர் சுந்தர்.சி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Jan 15, 2025 - 07:15
 0  3
“2 நாட்களாக கண்ணீருடன் இருந்தேன்” - ‘மதகஜராஜா’ வரவேற்பு குறித்து சுந்தர்.சி நெகிழ்ச்சி!

சென்னை: ‘மதகஜராஜா’ படத்துக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து கடந்த 2 நாட்களாக கண்களில் கண்ணீருடன் தான் இருந்தேன் என்று இயக்குநர் சுந்தர்.சி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் திரையரங்கு ஒன்றுக்கு வருகை தந்த சுந்தர்.சி பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ’மதகஜராஜா’ படம் 12 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது. போன கும்பமேளாவுக்கு வரவேண்டிய படம், இந்த ஆண்டு வந்துள்ளது. படத்துக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து கடந்த 2 நாட்களாக கண்களில் கண்ணீருடன் தான் இருந்தேன். கிட்டத்தட்ட நூற்றுக்கு நூறு சதவீதம் பாசிட்டிவ் விமர்சனம் வந்த படம் என்றால் எனக்கு தெரிந்து அது இதுதான். இப்படம் மட்டுமின்றி இந்த பொங்கலுக்கு வெளியான எல்லா படமும் பெரிய வெற்றி பெறவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow