18 ஆண்டுகால கனவு: முதல் முறையாக ஐபிஎல் பட்டம் வென்ற ஆர்சிபி - கொண்டாட்டத்தில் வீரர்கள், ரசிகர்கள்!

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

Jun 4, 2025 - 00:10
 0  3
18 ஆண்டுகால கனவு: முதல் முறையாக ஐபிஎல் பட்டம் வென்ற ஆர்சிபி - கொண்டாட்டத்தில் வீரர்கள், ரசிகர்கள்!

அகமதாபாத்: ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணி முதலில் பேட் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 190 ரன்கள் எடுத்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக பிலிப் சால்ட் மற்றும் விராட் கோலி இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். இருவர் மீதும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், 9 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் சால்ட். பஞ்சாப் அணியின் ஜேமிசன் பந்து வீச்சில் ஸ்ரேயஸ் எடுத்த அபார கேட்ச் மூலம் அவர் வெளியேற்றப்பட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow