ரூ.12 லட்சத்துக்கு மேல் ஒரு ரூபாய் வருவாய் அதிகரித்தாலும் ரூ.60 ஆயிரம் வரி விதிக்கப்படும்

புதிய வருமான வரிவிதிப்பு முறைப்படி ரூ.12,75,000க்கு மேல் கூடுதலாக ஒரு ரூபாய் அதிக வருமானம் இருந்தால்கூட ரூ.60 ஆயிரம் வரி செலுத்த வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.

Feb 2, 2025 - 10:45
 0  3
ரூ.12 லட்சத்துக்கு மேல் ஒரு ரூபாய் வருவாய் அதிகரித்தாலும் ரூ.60 ஆயிரம் வரி விதிக்கப்படும்

மத்திய அரசின் புதிய வருமான வரிவிதிப்பு முறைப்படி ரூ.12,75,000க்கு மேல் கூடுதலாக ஒரு ரூபாய் அதிக வருமானம் இருந்தால்கூட ரூ.60 ஆயிரம் வரி செலுத்த வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.

தற்போதைய பட்ஜெட் அறிவிப்பின்படி புதிய வரிவிதிப்பு முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ரூ.12 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு முழு வரிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நிலையான கழிவுத் தொகை ரூ.75 ஆயிரத்தையும் சேர்த்தால் ரூ.12,75,000 வரை ஆண்டு வருமானம் உள்ள மாத ஊதியம் பெறுவோர் இனி வருமான வரி செலுத்த வேண்டியிருக்காது. இப்படி பார்த்தால் மாதம் ரூ.1,06,250 வரை ஊதியம் பெறுபவர்களுக்கு வரி கிடையாது. அதே நேரத்தில் மாத வருமானத்திலோ, ஆண்டு வருமானத்திலோ மிகச் சிறிய உயர்வு இருந்தால்கூட குறைந்தபட்சம் ரூ.60 ஆயிரம் வரி செலுத்த வேண்டியிருக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow